இந்த வாரம், ஜனவரி 31 அன்று ஆறு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
சர்வர் சுந்தரம், டகால்டி, நாடோடிகள் 2, உற்றான், மாயநதி, வன்முறை என ஆறு படங்கள் இந்த வார வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆறு படங்களில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம், டகால்டி என இரு படங்கள் வெளியாகின்றன. தவிரவும் சசிகுமார் நடித்துள்ள நாடோடிகள் 2 படமும் வெளியாவதால் இந்த வார இறுதி நாள்களில் திரையரங்குகளுக்குச் செல்ல ரசிகர்கள் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.