செய்திகள்

ஏழு சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கும் 'ஞானச் செருக்கு' திரைப்பட ட்ரைலர்

28th Jan 2020 06:31 PM

ADVERTISEMENT

 

சென்னை மறைந்த ஓவியர் வீர சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள ஞானச் செருக்கு  திரைப்படத்தின் ட்ரைலர் செவ்வாயன்று வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் தரணி ராஜேந்திரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத்  திரைப்படத்தில் மறைந்த ஓவியர் வீர சந்தானம்,  ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

திரையில் வெளியாகும் முன்னரே இந்தப் படமானது உலக அளவில் மொத்தம் 40 சர்வதேச அங்கீகாரங்களை பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் ஏழு சர்வதேச விருதுகளைக் குவித்து இருக்கிறது.

ADVERTISEMENT

இந்தப் படத்திற்கு இசை - சக்கரவர்த்தி, படத்தொகுப்பு : மகேந்திரன், ஒளிப்பதிவு: கோபி துரைசாமி, இணைத் தயாரிப்பு : ஜெகத்ரட்சகன். தயாரிப்பு - பரணி.

இந்தப் படத்தின் ட்ரைலர் செவ்வாய் காலை வெளியிடப்பட்டுள்ளது.  

 

ADVERTISEMENT
ADVERTISEMENT