66-வது தேசியத் திரைப்பட விருதுகளுக்கான பட்டியலில் சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வானது - பாரம். ப்ரியா கிருஷ்ணசாமி தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் ஆர். ராஜு, சுகுமார் சண்முகம் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - வேத் நாயர். இப்படத்தை வெற்றிமாறன் வெளியிடுகிறார்.
பாரம் படம் பிப்ரவரி 21 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசரும் தற்போது வெளியாகியுள்ளது.