செய்திகள்

நாளை தர்பார் ரிலீஸ்! செளந்தர்யா ரஜினிகாந்த்தின் நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு!

8th Jan 2020 01:25 PM

ADVERTISEMENT

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்..

ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லன் - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி.

தர்பார் படம் நாளை ( ஜனவரி 9) தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளிவரவுள்ளது. படத்தை முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க பல ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது செளந்தர்யா ரஜினிகாந்த் ஒரு புதிய தகவலை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். என் தந்தை சென்னைக்குத் திரும்பினார் என்று பதிவிட்டு ரஜினியின் சில் அவுட் ஃபோட்டோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் தனது தந்தையைப் புகழ்ந்து, 'த ஒன், த அல்டிமேட், த ஒன்லி கிங்’ என்று பதிவிட்டுள்ளார். தர்பார் பட ரிலீஸ் சமயத்தில் இந்த வாசகங்கள் ரஜினி ரசிகர்களின் பரவலான கவனத்தைப் பெற்று வைரலாகி வருகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT