செய்திகள்

இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ள த்ரிஷா படம்

8th Jan 2020 12:46 PM | எழில்

ADVERTISEMENT

 

பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த த்ரிஷாவின் அடுத்தப் படமாக பரமபதம் விளையாட்டு வெளியாகவுள்ளது.

த்ரிஷா, நந்தா, ரிச்சர்ட் நடித்துள்ள இப்படத்தை கே. திருஞானம் இயக்கியுள்ளார். இசை - அம்ரிஷ். இது, த்ரிஷாவின் 60-வது படமாகும். கடந்த ஆறு மாதங்களாக வெளியாகக் காத்திருந்த இந்தப் படம் ஜனவரி 31 அன்று வெளியாகவுள்ளது.

கர்ஜனை, ராங்கி ஆகிய த்ரிஷாவின் படங்கள் இந்த வருடம் வெளிவரவுள்ளன. இது தவிர மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் அவர் நடித்து வருகிறார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT