செய்திகள்

கிரிக்கெட் வீரர் பாண்டியா - நடிகை நடாஷா காதல் ஜோடிக்கு வாழ்த்து சொன்ன ‘முன்னாள்’கள்!

3rd Jan 2020 02:33 PM | எழில்

ADVERTISEMENT

 

இளம் கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா - நடிகை நடாஷா ஸ்டான்கோவிச் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

ஹிந்தி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நடாஷா, மும்பையில் வசிக்கும் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். நடிப்பு வாய்ப்புக்காக 2012 முதல் இந்தியாவில் வசிக்கும் நடாஷா, சத்யாகிரஹா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 

கிரிக்கெட் வீரர் பாண்டியாவும் நடிகை நடாஷாவும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டன்று தனக்கு நடாஷாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக பாண்டியா அறிவித்துள்ளார். இருவருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். 

ADVERTISEMENT

இந்நிலையில் ஹார்திக் பாண்டியாவைக் காதலிப்பதாகக் கூறப்பட்ட நடிகை ஊர்வஷி ரெளடேலா, பாண்டியா - நடாஷா காதல் ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

நிச்சயதார்த்தத்துக்கு வாழ்த்துகள். உங்கள் உறவில் காதலும் மகிழ்ச்சியும் பொங்கட்டும். இருவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

அதேபோல நடாஷாவை இதற்கு முன்பு காதலித்த டிவி நடிகர் அலி கோனியும் வாழ்த்துகளை எமோஜிக்களின் வழியாகத் தெரிவித்துள்ளார்.

பாண்டியா - ஊர்வஷி

 

நடாஷா - அலி கோனி

 

ADVERTISEMENT
ADVERTISEMENT