செய்திகள்

நடிகர் விஷ்ணு விஷாலுடனான நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டார் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை!

2nd Jan 2020 02:43 PM | எழில்

ADVERTISEMENT

 

நடிகர் விஷ்ணு விஷாலுடனான நெருக்கமான புகைப்படங்களைப் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் இவர்களுடைய காதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

2011 டிசம்பரில் நடிகர் கே. நட்ராஜின் மகளான ரஜினியைக் காதலித்துத் திருமணம் செய்தார் நடிகர் விஷ்ணு விஷால். 2017-ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 2018 நவம்பரில் மனைவி ரஜினியை விவாகரத்து செய்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்தார். 

ஜுவாலா கட்டா, பாட்மிண்டன் வீரர் சேதன் ஆனந்தைத் திருமணம் செய்து, 2011-ல் விவாகரத்து செய்தார். 

ADVERTISEMENT

கடந்த வருட ஜூன் மாதம், ஜுவாலா கட்டாவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்தார் விஷ்ணு விஷால். இதனால் இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டது.

தற்போது, புத்தாண்டையொட்டி விஷ்ணு விஷாலும் ஜுவாலா கட்டாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. தனது சமூகவலைத்தளங்களில் இப்புகைப்படங்களை ஜுவாலா கட்டா வெளியிட்டுள்ளார். இதன்மூலம் இவ்விருவரும் தங்கள் காதலை வெளியுலகுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

Tags : Jwala Gutta
ADVERTISEMENT
ADVERTISEMENT