செய்திகள்

ரஜினியைப் போற்று: கபாலிக்குப் பிறகு தர்பாருக்கும் விமானத்தில் விளம்பரம்!

2nd Jan 2020 11:13 AM | எழில்

ADVERTISEMENT

 

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.

ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லன் - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. தர்பார் படம் ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் தர்பார் படத்தின் விளம்பர உத்தி ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது. இதற்கு முன்பு ரஜினி நடித்த கபாலி படத்துக்கு விமானத்தின் வெளிப்பகுதியில் விளம்பரம் செய்யப்பட்டது. அதேபோல தற்போது சென்னை - ஹைதராபாத் செல்லும் விமானத்தில் தர்பார் படத்தின் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தைக் கொண்டுள்ள விமானத்தின் புகைப்படத்தை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : Rajinkanth
ADVERTISEMENT
ADVERTISEMENT