செய்திகள்

நான்காவது முறையாக இயக்குநர் மித்ரன் ஜவஹருடன் இணையும் தனுஷ்

2nd Jan 2020 04:33 PM | எழில்

ADVERTISEMENT

 

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோஹினி, உத்தமபுத்திரன், குட்டி என மூன்று படங்களில் நடித்துள்ளார் தனுஷ். 

இந்நிலையில் மித்ரன் ஜவஹருடன் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றவுள்ளார் தனுஷ்.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அந்தப் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். தனுஷின் கதை, திரைக்கதையை இயக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். மித்ரன் ஜவஹர் இதுவரை இயக்கியுள்ள நான்குப் படங்களுமே ரீமேக் படங்கள்தாம்.

ADVERTISEMENT

தனுஷ் - மித்ரன் கூட்டணியின் புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags : Dhanush
ADVERTISEMENT
ADVERTISEMENT