செய்திகள்

ஆரி அருஜுனாவாக மாறிய நடிகர் ஆரி!

2nd Jan 2020 10:07 AM

ADVERTISEMENT

 

பிக்பாஸ் பிரபலம் ஆரி அண்மையில் தனது பெயரை ஆரி அருஜுனா என்று மாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன். இனி வரும் காலங்களில் ஆரி அருஜுனா என்று என்னை அழைக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

ADVERTISEMENT

ஆரி அருஜுனா தற்போது, 'எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான்',  'மௌன வலை', 'அலேகா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அலேகா படத்தில் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று படங்களும் 2020-ம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT