செய்திகள்

வைரலாகும் நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்டப் புகைப்படங்கள் 

1st Jan 2020 03:41 PM

ADVERTISEMENT

 

நயன்தாரா கடந்த ஆண்டில் நடித்த படங்களுள் சில படங்கள் வெற்றியும், சில படங்கள் கவனம் பெறாமலும் போய்விட்டன. அஜித்துடன் நடித்த விஸ்வாசம், விஜய்யுடன் பிகில் ஆகிய இரண்டு பெரிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர்களாக மாறியது, அதே நேரத்தில் பெண் மையத் திரைப்படமான ஐரா, திரில்லர் படமான கொலையுதிர் காலம் மற்றும் சிவ கார்த்திகேயுடன் நடித்த மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் தோல்வியுற்றது.

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவின் நெற்றிக்கண் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியுடன் மூக்குத்தி அம்மன் போன்ற வித்யாசமான படங்களில் இந்த ஆண்டு நடிக்கிறார் நயன்தாரா.

ADVERTISEMENT

கோலிவுட்டில் நீண்ட கால காதலர்களான நயன் விக்னேஷ் எந்த புகைப்படங்களை தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தாலும் அது உடனடியாக ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வைராகிவிடும். அண்மையில் இந்த ஜோடியின் கிறுஸ்துமஸ் புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 2020 ஆண்டின் துவக்கத்தில், நயன்தாரா புத்தாண்டு விடுமுறையை கொண்டாடி வருகிறார்,  கடற்கரையில் எடுத்த அவரது புகைப்படத்தின் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இப்புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகி வருகின்றன.

Tags : nayanthara
ADVERTISEMENT
ADVERTISEMENT