செய்திகள்

ரஜினி - நயன் காதல் காட்சிகளுடன் தர்பார் படத்தின் அடுத்த ப்ரோமோ விடியோ வெளியீடு

1st Jan 2020 08:34 PM

ADVERTISEMENT

 

சென்னை: ரஜினிகாந்த்,  நயன்தாரா இருவரின் குறும்பான காதல் காட்சிகளுடன் 'தர்பார்' படத்தின் அடுத்த ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது.

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.

ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லன் - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி.

ADVERTISEMENT

தர்பார் படம் ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளிவரவுள்ளது.  கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக இப்படத்தின் படத்தில் இனம்பெற்றுள்ள டும் டும் பாடல் காட்சியின் ப்ரோமோ விடியோ வெளியானது.

 

இந்நிலையில் ரஜினிகாந்த்,  நயன்தாரா இருவரின் குறும்பான காதல் காட்சிகளுடன் 'தர்பார்' படத்தின் அடுத்த ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT