செய்திகள்

மற்றுமொரு வித்தியாசமான படத்துடன் களமிறங்கும் பார்த்திபன்

1st Jan 2020 02:51 PM | எழில்

ADVERTISEMENT

 

ஆர். பார்த்திபன் நடித்து இயக்கிய படம் - ஒத்த செருப்பு. இந்தப் படத்துக்குப் பிறகு பார்த்திபன் நடித்து இயக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இரவின் நிழல் என்கிற படத்தை அடுத்ததாக இயக்கவுள்ளார் பார்த்திபன். இயக்குநர் பாரதிராஜா, இத்தகவலைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். 

ஆசியாவின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்று படத்தின் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் நடித்த ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இடம்பெற்றது. அதேபோல அடுத்தப் படத்தையும் வித்தியாசமான பாணியில் இயக்கவுள்ளார் பார்த்திபன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT