செய்திகள்

‘புன்னகை மன்னன்’ முத்த சர்ச்சை; ரேகாவிடம் கமல் மன்னிப்பு கேட்கவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை

26th Feb 2020 11:47 AM

ADVERTISEMENT

 

1986-ல் வெளியான புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி என்னுடைய சம்மதம் பெறாமல் படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் கமல் முத்தம் கொடுப்பார் என எனக்குத் தெரியாது. அப்போது எனக்கு வயது 16 என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் நடிகை ரேகா. அவருடைய இந்தப் பேட்டி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்தக் காட்சியை எனக்குத் தெரியாமல் படமாக்கியதற்காக இயக்குநர் கே. பாலசந்தரும் கமல் ஹாசனும் என்னிடம் எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்? சூப்பர் ஹிட்டான படம் அது. எனக்கு அதற்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஒருவேளை முத்தக்காட்சியை படமாக்குவார்கள் என்று எனக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தால் அக்காட்சியில் நடிக்க சம்மதித்திருக்க மாட்டேன் என்று ரேகா மேலும் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

மீ டூ புகார்களும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் அதிகமாக உள்ள இக்காலக்கட்டத்தில் புன்னகை மன்னன் முத்தக் காட்சி குறித்த ரேகாவின் பேட்டி சமூகவலைத்தளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் ஒரு நடிகையிடம் முத்தக் காட்சி குறித்து தெரியப்படுத்தாமல் அதைப் படமாக்கியது தவறு.  இக்காட்சியை ரேகாவுக்குத் தெரியாமல் படமாக்கியதற்காக ரேகாவிடம் கமல் மன்னிப்பு கோரவேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT