செய்திகள்

இந்த வாரம் வெளியாகும் திரெளபதி உள்ளிட்ட7 தமிழ்ப் படங்களும் அதன் டிரெய்லர்களும்

25th Feb 2020 03:29 PM | எழில்

ADVERTISEMENT

 

இந்த வாரம் திரெளபதி உள்ளிட்ட 7 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

திரெளபதி, பரமபதம் விளையாட்டு, இரும்பு மனிதன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், கடலில் கட்டுமரமாய், உன் காதல் இருந்தால், கல்தா ஆகிய 7 தமிழ்ப் படங்கள் பிப்ரவரி 28 அன்று வெளிவரவுள்ளன.

ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் மோகன் ஜி. இயக்கியுள்ள படம் - திரெளபதி. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடகக் காதல் குறித்து படத்தின் மையக்கதை உருவாக்கப்பட்டுள்ளதால் டிரெய்லரில் உள்ள பல வசனங்கள் சமூகவலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. திரௌபதி படத்தைத் தடைசெய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படம் வார இறுதியில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

கல்தா 

உன் காதல் இருந்தால்

பரமபதம் விளையாட்டு

கடலில் கட்டுமரமாய்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

திரெளபதி

இரும்பு மனிதன்

போஸ்டர்கள்

ADVERTISEMENT
ADVERTISEMENT