செய்திகள்

விஜய்யின் குட்டி கதைக்கு இன்னும் ஒருநாள் உள்ளது: முன்னோட்ட விடியோவை வெளியிட்டார் அனிருத்!

13th Feb 2020 07:40 PM

ADVERTISEMENT


விஜய்யின் மாஸ்டர் படத்தினுடைய முதல் பாடல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ள நிலையில், அதன் முன்னோட்டத்தை இசையமைப்பாளர் அனிருத் இன்று வெளியிட்டார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாதனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து பொங்கல், குடியரசு தினம் என ஒவ்வொரு பண்டிகைதோறும் விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு அப்டேட்டை வெளியிட்டு வருகிறது மாஸ்டர் படக்குழு. இந்த வரிசையில், காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதியன்று (நாளை) மாஸ்டர் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பாடல் ஒரு குட்டி கதை எனத் தொடங்கும் என்றும் படக்குழு தெரிவித்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்தப் பாடலின் முன்னோட்டம் போன்ற ஒரு விடியோவை இசையமைப்பாளர் அனிருத் இன்று வெளியிட்டுள்ளார். இந்த விடியோவில், பாடலை சில விநாடிகள் மட்டுமே வாசிக்கும் அவர் இன்னும் ஒரு நாள் உள்ளது என்று கூறுகிறார்.

இப்படி அடுத்தடுத்த அப்டேட்கள் மூலம் மாஸ்டர் படக்குழுவினர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திலேயே வைத்துள்ளனர்.

Tags : master
ADVERTISEMENT
ADVERTISEMENT