செய்திகள்

காதலியை மணமுடித்தார் ‘பிக் பாஸ்’ மஹத்: மு.க. அழகிரி, சிம்பு நேரில் வாழ்த்து! (படங்கள்)

6th Feb 2020 12:54 PM

ADVERTISEMENT

 

அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான மஹத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகக் கவனம் பெற்றார்.

மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார் மஹத். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் நடைபெற்றது.  

இந்நிலையில், பிப்ரவரி 1 அன்று பிரச்சி மிஸ்ராவைத் திருமணம் செய்துகொண்டதாக மஹத் அறிவித்துள்ளார். திருமணம் குறித்து இன்ஸ்டகிராமில் மஹத் கூறியதாவது:

ADVERTISEMENT

பிப்ரவரி 1 அன்று திருமணம் செய்துகொண்டேன். என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் என்று தன் மகிழ்ச்சியை மஹத் வெளிப்படுத்தியுள்ளார். திருமண நிகழ்ச்சியில் மு.க. அழகிரி, சிம்பு, அனிருத் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT