செய்திகள்

பாலிவுட்டுக்குச் செல்லும் கைதி & லோகேஷ் கனகராஜ்!

4th Feb 2020 11:15 AM | எழில்

ADVERTISEMENT

 

தமிழில் பெரிய வெற்றி பெற்ற கைதி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

பிகில் படத்துக்குப் போட்டியாகக் கடந்த வருட தீபாவளி சமயத்தில் வெளியான கைதி படம், ரூ. 100 கோடி வசூலித்துச் சாதித்தது.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள கைதி படத்தை இயக்கினார். இசை - சாம் சிஎஸ். 

ADVERTISEMENT

பாடல்களும் இல்லாமல் கதாநாயகி என்கிற கதாபாத்திரமும் இல்லாமல் எனவே துளிக் காதல் காட்சிகளும் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு தமிழ்ப் படம் ரூ. 100 கோடி வசூலித்தது பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மற்றும் கார்த்தி ஆகியோரைப் போல இதர தமிழ்த் திரைக் கலைஞர்களும் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளை அதிகம் மேற்கொள்ளவேண்டும் என்கிற செய்தியை இந்த வசூல் நிலவரம் வழியாக உணர்த்தியுள்ளார்கள் தமிழ் ரசிகர்கள். 

இந்நிலையில் கைதி படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் இப்படத்தைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸும் ரிலையன்ஸ் எண்டர்டயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஹிந்தி கைதியைத் தயாரிக்கின்றன. 

ஹிந்தியிலும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவுள்ளார். தற்போது விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், இதற்கு அடுத்ததாக ஹிந்தி கைதியை இயக்கவுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT