செய்திகள்

இணையத் தொடரில் களமிறங்கும் கமல் ஹாசன்!

4th Feb 2020 04:40 PM | எழில்

ADVERTISEMENT

 

அமேஸான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற தளங்களில் வெளியாகும் இணையத் தொடர்களில் இனிமேல் கமல் ஹாசனின் பங்களிப்பையும் நம்மால் காணமுடியும்.

பனிஜே ஆசியா அண்ட் டர்மரிக் மீடியா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இணையத் தொடர்களுக்குத் தேவையான கதை, திரைக்கதைகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளார் கமல் ஹாசன். 

இந்தியாவில் பிராந்திய மொழிகளில் இணையத் தொடர் தயாரிப்பதற்கான கதை, திரைக்கதைகளை பனிஜே ஆசியா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளோம். அனைத்து மொழிகளிலும் வெவ்வேறு வகையிலான கதைகளை உருவாக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார் கமல். 

ADVERTISEMENT

கமல் பங்களிப்பில் உருவாக்கப்படும் இணையத் தொடர்கள் அவருடைய படங்களைப் போலவே வித்தியாசமாக அமையும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளார்கள் ரசிகர்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT