செய்திகள்

வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நான் நடிக்கவில்லை: நயன்தாரா அறிக்கை

30th Dec 2020 11:47 AM

ADVERTISEMENT

 

வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் தவறானது என நடிகை நயன்தாரா தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதனை நயன்தாரா மறுத்துள்ளார். அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நயன்தாரா நடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை நயன்தாரா மறுத்துள்ளார். இது ஆதாரமற்ற வதந்தியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண், சிவா இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக அண்ணாத்த, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நயன்தாரா தற்போது நடித்து வருகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT