ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்புகிறார்.
ஹைதராபாதில் திரைப்பட படப்பிடிப்பிலிருந்த ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் உடல்நிலை தேறிவந்ததையடுத்து, ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.
ரஜினிகாந்துக்கு மருத்துவ ரீதியாக சில அறிவுறுத்தல்களையும் மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.
ADVERTISEMENT
- ரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஒரு வாரம் முற்றிலுமாக ஓய்வெடுக்க வேண்டும்.
- உடல் சார்ந்த செயல்பாடுகளை முடிந்தளவு குறைத்துக்கொள்ள வேண்டும். மனஅழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
- கரோனா பாதிப்பு ஏற்படக் கூடிய சூழல்கள் மற்றும் செயல்பாடுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.