செய்திகள்

சசிகுமார், வாணி போஜன் நடிக்கும் புதிய படம்

14th Dec 2020 04:26 PM

ADVERTISEMENT

 

சசிகுமாரின் புதிய படம் பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ், அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய் என்கிற படத்தை இயக்குகிறார்.

சசிகுமார், வாணி போஜன், பிந்து மாதவி, நாசர் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - ஜிப்ரான்.

ADVERTISEMENT

சசிகுமார் அடுத்ததாக முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி வேடங்களில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள். கே. பாக்யராஜ் திரைக்கதை எழுத ஜே.எஸ்.பி. சதீஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் சசிகுமார் நடிக்கவுள்ளார். வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனியும் கதிரேசனின் ஃபைவ்ஸ்டார் கிரியேசன்ஸும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

Tags : Sasikumar Vani Bhojan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT