செய்திகள்

மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்கிறார் ஸ்ரீ திவ்யா

5th Dec 2020 05:03 PM

ADVERTISEMENT

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் ஸ்ரீ திவ்யா.

அதன்பின்பு ஜீவா, பெங்களூர் நாட்கள், பென்சில், மருது எனப் பல படங்களில் நடித்தார். கடைசியாக 2017-ல் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்ததற்குப் பிறகு வேறெந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. 

இந்நிலையில் கெளதம் கார்த்திக்குக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ரீ திவ்யா.

ADVERTISEMENT

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கும் படத்தில் ஸ்ரீ திவ்யா நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்று வருடங்களுக்குப் பிறகு நடிக்கவுள்ளதால், படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன் என ட்வீட் செய்துள்ளார் ஸ்ரீ திவ்யா.

ADVERTISEMENT
ADVERTISEMENT