செய்திகள்

எனக்கு கரோனா இல்லை: நடிகர் அனில் கபூர் விளக்கம்

5th Dec 2020 11:41 AM

ADVERTISEMENT

 

கரோனாவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை பிரபல நடிகர் அனில் கபூர் மறுத்துள்ளார்.

ஜஜ் ஜக் ஜீயோ என்கிற படத்தில் அனில் கபூர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற வருண் தவான், நீத்து கபூர் ஆகிய இருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அனில் கபூரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்தாகச் செய்திகள் வெளியாகின.

இதற்கு மறுப்பு தெரிவித்து அனில் கபூர் கூறியதாவது:

ADVERTISEMENT

வதந்திகளைத் தெளிவுபடுத்துவதற்காக இதைக் கூறுகிறேன். பரிசோதனையில் எனக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. என் மீதான அனைவரின் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி என்றார்.

வருண் தவான், நீத்து கபூர் ஆகிய இருவருக்கும் கரோனா உறுதியானதால் படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அனில் கபூர், கியாரா அத்வானி ஆகியோருக்கு கரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. எனினும் கரோனாவால் அனில் கபூர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியானதால் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அனில் கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூர் கூறியதாவது:

தவறான செய்திகள் ஆபத்தானவை. நான் லண்டனில் உள்ளேன். என் தந்தையிடம் நான் பேசுவதற்கு முன்பே சில ஊடகங்கள் தவறான தகவல்கள் பரப்புவதைக் காண்கிறேன். செய்தி சேகரிப்பதில் பொறுப்புடன் இருங்கள் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT