செய்திகள்

பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை: முதல் பார்வை போஸ்டர் வெளியானது

DIN

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆர்யா. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். காலா படத்துக்குப் பிறகு பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைக்குண்டு ஆகிய படங்களைத் தயாரித்தார். 

இந்நிலையில் ஆர்யா நடிக்கும் படத்தைத் தற்போது இயக்கி வருகிறார் பா. இரஞ்சித். குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் இப்படத்துக்கு சார்பட்டா பரம்பரை எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதல் பார்வை போஸ்டரும் வெளியாகியுள்ளது. இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - முரளி.ஜி

இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல... இது நம்ப ஆட்டம்... எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்... ஏறி ஆடு... கபிலா என்று ட்விட்டரில் இப்படம் பற்றி எழுதியுள்ளார் பா. இரஞ்சித். 

சார்பட்டா பரம்பரை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT