செய்திகள்

சந்தானம் நடிக்கும் பாரிஸ் ஜெயராஜ்

1st Dec 2020 05:17 PM

ADVERTISEMENT

 

ஜான்சன்.கே இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்கிற படத்தில் நடிக்கிறார் சந்தானம்.

சந்தானம் நடித்த ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன்.கே அடுத்ததாக சந்தானத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். பாரிஸ் ஜெயராஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு - ஆர்தர் வில்சன். 

இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த வருடம் தில்லுக்கு துட்டு 2, ஏ1 ஆகிய படங்களில் நடித்த சந்தானம், இந்த வருடம் டகால்டி, பிஸ்கோத் ஆகிய படங்களில் நடித்துள்ளார். டிக்கிலோனா என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT