செய்திகள்

கரோனா வதந்திகளுக்கு செல்ஃபி புகைப்படம் வழியாகப் பதில் அளித்த நடிகர் சிவகுமார்

1st Dec 2020 04:01 PM

ADVERTISEMENT

 

நடிகர் சிவகுமாருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் அன்று நடிகர் சிவகுமார் (79), மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். இதையடுத்து சிவகுமாருக்கு கரோனா பாதிப்பு என்றும் தனிமைப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

பரிசோதனை முடிவில் சிவகுமாருக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிவகுமார் மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம், சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

1965-ல் காக்கும் கரங்கள் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் சிவகுமார். 1967-ல் வெளியான கந்தன் கருணை படம் அவருக்குப் பேரும் புகழையும் அளித்தது. 2001-ல் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்ததுடன் இனிமேல் பெரிய திரையில் நடித்தது போதும் என முடிவெடுத்தார் சிவகுமார். 1999 முதல் 2005 வரை சித்தி, அண்ணாமலை என தொலைகாட்சித் தொடர்களில் நடித்தார். நடிப்பு வேண்டாம் என முடிவெடுத்த பிறகு கம்பராமாயணம் குறித்த ஆய்வில் இறங்கினார். கம்பராமாயணம் குறித்த சொற்பொழிவுகளில் அதிகமாகப் பங்கெடுக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று அனைவரும் குறிப்பிடும் விதத்தில் தனது உடலை யோகா மற்றும் பல்வேறு உடற்பயிற்சிகள் மூலம் திடமாகக் காத்து வருகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT