செய்திகள்

மூளைப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ராகுல் ராய்

DIN

மகேஷ் பட் இயக்கிய ஆஷிகி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி, புகழ்பெற்றவர் ராகுல் ராய். ஏராளமான ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். 2006-ல் நடைபெற்ற ஹிந்தி பிக் பாஸின் முதல் நிகழ்ச்சியில் பட்டம் வென்றார். 

52 வயது ராகுல் ராய் தற்போது நிதின் குமார் குப்தா இயக்கி வரும் எல்ஏசி - லிவ் தி பேட்டில் என்கிற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கார்கில் மலைப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடும் குளிரில் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது ராகுலால் திடீரென வசனங்களைச் சரியாக உச்சரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. உடல்நலக் குறைவு மேலும் ஏற்பட்டதால் கார்கிலில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. உடல்நிலை மோசமானதால் உடனடியாக ஸ்ரீநகரிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராகுல் ராய்க்கு மூளைப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

அபேசியா (Aphasia) என்கிற மூளைப் பாதிப்பு ராகுல் ராய்க்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அவரால் சரளமாகப் பேச முடியாது என்று கூறப்படுகிறது. மருத்துவர்கள் அளித்துள்ள சிகிச்சையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ராகுல் ராய் குடும்பத்தினர் நம்பிக்கையுடன் உள்ளார்கள். ராகுலின் உறவினர் ரோமீர் சென் ஒரு பேட்டியில் கூறியதாவது: மருத்துவமனையில் ராகுலுக்குத் துணையாக நாங்கள் உள்ளோம். மருத்துவர்கள் அளித்துள்ள மருந்துகள் நன்கு வேலை செய்கின்றன. இந்தப் பாதிப்பிலிருந்து அவர் விரைவில் மீண்டு வந்துவிடுவார். அனைவரும் அவருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT