பிரபல நடிகை தமன்னாவின் பெற்றோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதுபற்றி ட்விட்டரில் நடிகை தமன்னா கூறியதாவது:
கடந்த வார இறுதியில் என்னுடைய பெற்றோருக்கு கரோனா அறிகுறிகள் லேசாக இருந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் பரிசோதனை மேற்கொண்டோம். துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பெற்றோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளிடம் இதுபற்றி தெரிவித்துவிட்டோம். பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறோம். நான் உள்பட இதர குடும்ப உறுப்பினர்களுக்கும் பணியாளர்களுக்கும் கரோனா இல்லை. அனைவருடைய பிரார்த்தனைகளால் என்னுடைய பெற்றோர் விரைவில் குணமாவார்கள் என எண்ணுகிறேன் என்று கூறியுள்ளார்.