செய்திகள்

சுசாந்த் சிங் மரண வழக்கு: நீதி கிடைக்கும் என சுரேஷ் ரெய்னா நம்பிக்கை

26th Aug 2020 10:22 AM

ADVERTISEMENT

 

சுசாந்த் சிங் மரண வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

நடிகா் சுசாந்த் சிங், மும்பை பந்த்ரா புகா் பகுதியில் அமைந்துள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தாா். இந்த வழக்கை துணைக் காவல் ஆணையா் தலைமையிலான மும்பை காவல்துறை குழு விசாரணை நடத்தி வந்தது.

சுசாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடை தந்தை சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

சுசாந்த் சிங் மரணம் தொடர்பாக அவருடைய காதலியும் நடிகையுமான ரியா மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது புகாா் தெரிவித்த சுசாந்த் சிங்கின் தந்தை இந்திரஜித், சுசாந்த் சிங்கின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 15 கோடி பணத்தை ரியா குடும்பத்தினா் தவறாக கையாண்டதாகவும் புகாா் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. 

சுசாந்தின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பைக்குக் கடந்த வியாழக்கிழமை வந்த சிபிஐ சிறப்புக் குழு, விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணை அதிகாரிகள், தடயவியல் நிபுணா்கள் ஆகியோரை உள்ளடக்கிய சிபிஐ சிறப்புக் குழு மும்பைக்கு வந்தது. மும்பை காவல்துறையிடமிருந்த பெறப்பட்ட அறிக்கை மற்றும் வழக்கு தொடா்பான ஆவணங்களின் அடிப்படையில் அந்தக் குழு விசாரணையைத் தொடங்கியது.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுசாந்த் சிங் பற்றி அவர் கூறியதாவது:

சகோதரா, எங்கள் இதயத்தில் எப்போதும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். வேறு எதையும் விடவும் உங்கள் ரசிகர்களுக்குத்தான் இழப்பு அதிகம். நம் அரசு மீதும் அதன் தலைவர்கள் மீதும் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. உங்களுக்கு நீதி கிடைக்க கடைசி வரை அவர்கள் முயற்சி கொள்வார்கள். நீங்கள் உண்மையான ஊக்கம் அளிப்பவர் என்று கூறியுள்ளார். 

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்தார்.

Tags : Sushant
ADVERTISEMENT
ADVERTISEMENT