செய்திகள்

படப்பிடிப்புக்கு மீண்டும் செல்லத் திட்டம்: அபிஷேக் பச்சன் பேட்டி

26th Aug 2020 11:28 AM

ADVERTISEMENT

 

கரோனா பாதிப்பிலிருந்து குணமான அபிஷேக் பச்சன், மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

அபிஷேக் பச்சனுடன் அவரது தந்தை அமிதாப் பச்சனுக்கும் கரோனா நோய்த்தொற்று உறதி செய்யப்பட்டது. பின்னா் அபிஷேக்கின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வா்யா ராய், அவா்களது மகள் ஆராத்யா ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். அவா்கள் அனைவருமே மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அவா்கள் அனைவருமே மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

ஐஸ்வா்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோா் கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 

ADVERTISEMENT

கரோனாவிலிருந்து சமீபத்தில் மீண்ட பிரபல நடிகர் அமிதாப் பச்சன், கோன் பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் தானும் மீண்டும் பணிக்குத் திரும்பவுள்ளதாக அபிஷேக் பச்சன் கூறியுள்ளார். ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அபிஷேக் பச்சன் கூறியதாவது:

படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளேன். தி பிக் புல், பாப் பிஸ்வாஸ் படங்களை முடிக்க வேண்டியிருக்கிறது. இதன் படப்பிடிப்பை விரைவில் நடத்தவுள்ளோம். கரோனாவால் பாதிக்கப்பட்ட நான் இது பற்றி மக்களுக்கு அறிவுரை சொல்லத் தகுதி பெற்றதாக நினைக்கவில்லை. நான் சொல்ல விரும்புவதெல்லாம், நேர்மறை எண்ணங்களுடன் கட்டுப்பாட்டுடன் இருங்கள் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT