செய்திகள்

பாடகர் எஸ்.பி.பி.க்காக சபரிமலை கோயிலில் பிரார்த்தனை

21st Aug 2020 05:12 PM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடகர் எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரார்த்தனை நடைபெற்றுள்ளது.

பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு எக்மோ மற்றும் வெண்டிலேட்டா் கருவிகளின் துணையுடன் தீவிர சிகிச்சையக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் அவரது உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது. எஸ்.பி.பி.க்குச் சா்வதேச மருத்துவ நிபுணா்களும், உள்நாட்டு மருத்துவக் குழுவினரும் ஒருங்கிணைந்து சிகிச்சையளித்து வருவதாக எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை நிா்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. கோயில் முன்பு எஸ்.பி.பி. பாடிய சங்கராபரணம் படப் பாடல்களை வாத்தியங்கள் கொண்டு வாசித்து பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. 

ADVERTISEMENT

Tags : SPB sabarimala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT