செய்திகள்

தனுஷ் படத்தை விமர்சனம் செய்த ஹிந்தி நடிகர்

20th Aug 2020 04:39 PM

ADVERTISEMENT

 

தனுஷ் நடித்த ஹிந்திப் படமான ராஞ்ஜனாவை ஹிந்தி நடிகர் அபய் தியோல் விமர்சனம் செய்துள்ளார்.

2013-ல் தனுஷ், சோனம் கபூர் நடித்த ராஞ்ஜனா என்கிற ஹிந்திப் படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கினார். அவருடன் மற்றுமொரு ஹிந்திப் படத்தில் தனுஷ் நடிக்கிறார். தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலி கான் ஆகியோர் நடிப்பில் அத்ராங்கி ரே படத்தை இயக்கி வருகிறார் ஆனந்த் எல். ராய்.

இந்நிலையில் ராஞ்ஜனா படம் பற்றி ஒருவர் விமர்சனம் எழுதியிருந்தார். அதைப் பாராட்டியும் ராஞ்ஜனா படம் பற்றியும் பாலிவுட் நடிகர் அபய் தியோல், இன்ஸ்டகிராமில் எழுதியதாவது:

ADVERTISEMENT

பிற்போக்குத்தனமான கருத்தால் இதுபோன்ற படங்களை வரலாறு கனிவுடன் அணுகாது. பல ஆண்டுகளாக பாலிவுட்டின் கதைக்கரு இதுதான். ஒரு பெண் சம்மதம் தெரிவிக்கும்வரை ஒரு ஆண் அவளைத் துரத்தலாம். சினிமாவில் மட்டும் அந்தப் பெண் காதலை ஒப்புக்கொள்வாள். ஆனால் நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்கள் பெண்களைப் பாலியல் துன்புறுத்தல்கள் வரை கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். இதுபோன்ற விஷயங்களை உயர்த்திப் பேசுவது பாதிக்கப்படும் பெண்ணைக் குற்றம் சுமத்துவதற்கு வழிவகுக்கும் என்று விமரிசனம் செய்துள்ளார்.

Tags : abhay deol
ADVERTISEMENT
ADVERTISEMENT