செய்திகள்

ரசிகர் தற்கொலை: குடும்பத்தினருக்குத் தொலைபேசி மூலமாக விஜய் ஆறுதல்

14th Aug 2020 03:40 PM

ADVERTISEMENT

 

தற்கொலை செய்துகொண்ட தனது ரசிகரின் குடும்பத்துக்குத் தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஜய்.

ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த பாலா, விஜய்யின் தீவிர ரசிகர். கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பாலா, தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன்பு, தலைவன் படம் பார்க்காமலே போகிறேன், தலைவனையும் என்று ட்வீட் வெளியிட்டிருந்தார். 

விஜய்யின் ரசிகரான பாலாவின் மரணத்துக்கு நடிகர்கள் ஷாந்தனு, சஞ்சீவ் எனப் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தார்கள். 

ADVERTISEMENT

இந்நிலையில் பாலாவின் குடும்பத்துக்குத் தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஜய். கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் மூலமாக பாலாவின் குடும்பத்தினரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜய், கால் மணி நேரத்துக்கும் மேலாகப் பேசி ஆறுதல் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : Vijay Bala
ADVERTISEMENT
ADVERTISEMENT