செய்திகள்

எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்

14th Aug 2020 05:07 PM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததையடுத்து கடந்த 5 ஆம் தேதி அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு லேசான கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

தொடர்ந்து, எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சிறப்பு மருத்துவக்குழு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். செயற்கை சுவாசக் கருவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, அதேநேரத்தில் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : SPB
ADVERTISEMENT
ADVERTISEMENT