செய்திகள்

தமிழ் நடிகை நிக்கி கல்ராணிக்கு கரோனா

14th Aug 2020 10:54 AM

ADVERTISEMENT

 

விஷால், ஐஸ்வர்யா அர்ஜூன், எஸ்.எஸ். ராஜமெளலி, கருணாஸ் என திரையுலகைச் சேர்ந்த பலரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு அத்ததாக நடிகை நிக்கி கல்ராணியும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாக கீ படத்தில் நடித்த நிக்கி கல்ராணி, கடந்த வாரம் கரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

டார்லிங் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிக்கி கல்ராணி ட்விட்டரில் கூறியதாவது:

ADVERTISEMENT

எனக்குச் சாதாரண அறிகுறிகள் தான் இருந்தன. தற்போது கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன். வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னுடைய வயது மற்றும் இணை நோய்கள் இல்லாத காரணத்தால் இதிலிருந்து மீண்டுவிடுவேன் என நம்பிக்கையாக இருந்தேன். ஆனால் என்னுடைய பெற்றோர், வயதானவர்கள், என்னுடைய நண்பர்கள் இதில் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும் என நினைத்தபோது அச்சமாக இருந்தது. எனவே அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடியுங்கள். தேவையிருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT