செய்திகள்

மறு உருவாக்கம் செய்யப்பட்ட சத்யா படப் பாடல்: கமல் நெகிழ்ச்சி

11th Aug 2020 04:45 PM

ADVERTISEMENT

 

சத்யா படப் பாடல் ஒன்று மறு உருவாக்கம் செய்யப்பட்டதற்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் கமல் ஹாசன்.

களத்தூர் கண்ணம்மா படம் ஆகஸ்ட் 12, 1960 அன்று வெளியானது. இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமல் ஹாசன். இந்த வருடத்துடன் கமல் திரையுலகுக்கு அறிமுகமாகி 60 வருடங்கள் ஆகின்றன. இதற்காக கமல் நடித்த சத்யா படத்தின் பாடல் ஒன்றை மீண்டும் உருவாக்கம் செய்துள்ளார்கள். சத்யா படத்தில் இடம்பெற்ற போட்டா படியுது பாடலை சிம்பா படத்தின் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர், வேறு நடிகர்களைக் கொண்டு மீண்டும் படமாக்கியுள்ளார்.

இப்பாடலின் விடியோவை மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியுடன் கமல் ட்வீட் செய்ததாவது:

ADVERTISEMENT

நான் நெகிழ்ந்துவிட்டேன். சாதாரண நினைவு மாதிரி இது தெரியவில்லை. நிபந்தனையற்ற அன்பின் வெளிப்பாடு. இதற்காகத் திருப்பித் தர வேண்டிய பரிசு, அதே அளவிலான அன்பு தான். அனைவருக்கும் நன்றி. எனக்கான ஊக்கம் என்பது, நீண்ட நெடிய பயணத்தில் நீங்கள் அனைவரும் என்னை இயங்க வைத்தது தான் என்றார். 

Tags : Kamalism
ADVERTISEMENT
ADVERTISEMENT