செய்திகள்

நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ரஜினி

9th Aug 2020 10:13 PM

ADVERTISEMENT


திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்தமைக்கு வாழ்த்திய நல் இதயங்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் நன்றி என நடிகர் ரஜினிகாந்த் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதை முன்னிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மலையாள நடிகர்கள் மோகன் லால், துல்கர் சல்மான் மற்றும் ரசிகர்கள் பலர் இதற்கென பிரத்யேக முகப்புப் படத்தை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சுட்டுரைப் பக்கத்தில் இதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ரஜினியின் சுட்டுரைப் பதிவு:  

ADVERTISEMENT

"என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி."

இத்துடன் "நீங்கள் இல்லாமல் நான் இல்லை" என்ற ஹேஷ்டேக்கையும் அவர் இணைத்துள்ளார்.
 

Tags : Rajnikanth
ADVERTISEMENT
ADVERTISEMENT