செய்திகள்

தொலைக்காட்சி நடிகர் மரணம்!

6th Aug 2020 01:54 PM

ADVERTISEMENT

 

ஹிந்தி தொலைக்காட்சி நடிகர் சமீர் சர்மா, அவருடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சமீர் சர்மா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் காவல்துறைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

சில தொலைக்காட்சித் தொடர்களில் மட்டுமல்லாமல் சில படங்களிலும் நடித்துள்ளார் சமீர் சர்மா (44). மும்பையில் உள்ள மலாட் பகுதியில் உள்ள ஒரு ஃபிளாட்டில் வாடகைக்குக் குடியிருந்து வந்தார். 

இந்நிலையில் நேற்றிரவு தனது வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டாா். அபார்ட்மெண்டின் வாட்ச்மேன் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் சமீர் சர்மாவின் உடலைப் பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பினார்கள். சமீர் சர்மா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT