செய்திகள்

ஊரடங்கால் மாறும் சூழல்: நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாகியுள்ள வெங்கட் பிரபு படம்!

29th Apr 2020 10:27 AM

ADVERTISEMENT

 

வெங்கட் பிரபு தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - ஆர்கே நகர். சரவண ராஜன் இதற்கு முன்பு வடகறி படத்தை இயக்கியிருந்தார்.

வைபவ், சம்பத் ராஜ், கருணாகரன், டி சிவா, சனா அல்தாப், அஞ்சனா கீர்த்தி போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - பிரேம்ஜி.

இந்தப் படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. பிறகு கடந்த டிசம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் உடனடியாக நெட்பிளிக்ஸிலிருந்து படம் நீக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போது ஆர்கே நகர் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் மீண்டும் வெளியாகியுள்ளது. இதன்மூலம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான தமிழ்ப் படங்களின் பட்டியலில் ஆர்கே நகரும் இடம்பிடித்துள்ளது. கரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் மேலும் பல தமிழ்ப் படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் நிலைமை புதிதாக உருவாகியுள்ளது. எனவே மே மாதம் ஓடிடி தளங்களில் பல தமிழ்ப் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : VENKAT PRABHU
ADVERTISEMENT
ADVERTISEMENT