செய்திகள்

மகள்களின் புகைப்படத்தை வெளியிட்டார் நதியா

20th Apr 2020 11:15 AM

ADVERTISEMENT

 

1980களில் புயலென கேரளாவிலிருந்து வந்து தமிழ் ரசிகர்களைக் கொள்ளை கொண்டவர் நதியா. 1985-ல் பூவே பூச்சுடவா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 1994 வரை தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்து வந்தார். 1988-ல் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு அமெரிக்கா, இங்கிலாந்தில் வசித்தவர் தற்போது சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 10 வருடங்களுக்குப் பிறகு 2004-ல் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கினார். எனினும் 2009-க்குப் பிறகு நேரடித் தமிழ்ப் படம் எதிலும் அவர் நடிக்கவில்லை.

சமீபகாலமாகச் சமூகவலைத்தளங்களில் அறிமுகமாகியுள்ள 53 வயது நதியா தனது இரு மகள்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : Nadia
ADVERTISEMENT
ADVERTISEMENT