செய்திகள்

கரோனா நிவாரணத்துக்கான இணைய இசை நிகழ்ச்சியில் ரூ. 980 கோடி நிதி திரட்டிய பாப் பாடகி

20th Apr 2020 04:42 PM

ADVERTISEMENT

 

கரோனா நிவாரணத்துக்கு நடத்தப்பட்ட இணைய இசை நிகழ்ச்சியில் ரூ. 980 கோடி திரட்டியுள்ளார் பாப் பாடகி லேடி காகா.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 17,600 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா நிவாரணத்துக்கு நடத்தப்பட்ட இணைய இசை நிகழ்ச்சியில் ரூ. 980 கோடி திரட்டியுள்ளார் பாப் பாடகி லேடி காகா. ஒன் வேர்ல்ட்: டுகெதர் அட் ஹோம் என்கிற பெயரில் லேடி காகாவும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா போன்ற இந்தியப் பிரபலங்களும் இதில் பங்கேற்றார்கள். காகா, ஸ்டீவி வொண்டர், பால் மெக்கார்ட்னி, எல்டன் ஜான் போன்றோர் வீட்டிலிருந்தபடியே இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். கரோனா விழிப்புணர்வு அறிவுரைகளை நடிகர்கள் வழங்கினார்கள். இந்த இசை நிகழ்ச்சி இணையத்தில் மட்டுமல்லாது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படும் இசை நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களும் நிறுவனங்களும் ஏராளமான நிதியுதவிகளை வழங்கியுள்ளார்கள். கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவத் துறை ஊழியர்களின் நலனுக்காக இந்த நிகழ்ச்சி வழியே நிதி திரட்டப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT