செய்திகள்

டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் 95 வயதில் மரணம்!

20th Apr 2020 01:32 PM

ADVERTISEMENT

 

டாம் அண்ட் ஜெர்ரி என்கிற கார்ட்டூன் கதாபாத்திரங்களைக் கொண்ட தொலைக்காட்சித் தொடரை இயக்கிய ஜீன் டைச், 95 வயதில் மரணமடைந்துள்ளார்.

1924-ல் சிகாகோவில் பிறந்த ஜீன் டைச், டாம் அண்ட் ஜெர்ரி கதாபாத்திரங்களைக் கொண்ட 13 தொடர்களை 1961-62 ஆண்டுகளில் எம்.ஜி.எம். நிறுவனத்துக்காக இயக்கினார். (டாம் அண்ட் ஜெர்ரி என்கிற பூனை மற்றும் எலி அனிமேஷன் கதாபாத்திரங்களை 1940-ல் வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பார்பரா ஆகியோர் உருவாக்கினார்கள்.)

1960-ல் மன்ரோ என்கிற அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார் ஜீன் டைச். டாம் டெரிபிக், பாப்பாய் போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கி ரசிகர்களிடம் புகழ் பெற்றார்.

ADVERTISEMENT

ஜீன் டைச், 95 வயதில் பராகுவேவில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். டைச்சின் முதல் மனைவி 1960-ல் காலமானார். அவருக்கு மூன்று மகன்கள் உள்ளார்கள். 2-வது மனைவியுடன் பராகுவேவில் வசித்து வந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT