செய்திகள்

கரோனாவால் முத்தக் காட்சிகளை இனி எப்படிப் படமாக்குவது?: பிரபல இயக்குநரின் தனிக் கவலை!

13th Apr 2020 05:05 PM

ADVERTISEMENT

 

கரோனா பயத்தால் முத்தக் காட்சிகளை இனி எப்படிப் படமாக்கப் போகிறோம் எனப் பிரபல பாலிவுட் நடிகர் ஷுஜித் சிர்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்து விட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 9,200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஷுஜித் சிர்காருக்கு கரோனா அச்சுறுத்தலால் புதிய கவலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இன்ஸ்டகிராம் பதிவில் அவர் கூறியதாவது:

கரோனா பாதிப்பு முடிந்தபிறகு திரையுலகம் நெருக்கமான காதல் காட்சிகளை இனி எப்படிப் படமாக்கப் போகிறது என்பதைப் பார்க்கவேண்டும். முக்கியமாக முத்தம் மற்றும் கட்டியணைக்கும் காட்சிகள். எந்தளவுக்கு இந்தக் காட்சிகளை இனி படமாக்கப் போகிறோம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு நடிகை தியா மிர்சா கூறியதாவது: படப்பிடிப்புகளில் எல்லாப் பணிகளுமே நெருக்கமாகத்தானே நடக்கும்! ஒரு காட்சியை உருவாக்க அனைவரும் இணைந்துதான் பணியாற்ற வேண்டும். மாஸ்க், கிளவுஸ் அணிந்துதானே படப்பிடிப்புகளில் பணியாற்றப் போகிறோம்? காலம் தான் இதற்குப் பதில் சொல்லும் என்று கூறியுள்ளார்.

Tags : COVID 19
ADVERTISEMENT
ADVERTISEMENT