குட்! டெங்குவுக்கு எதிராக பிரபலங்கள் பலரும் தங்கள் புகைப்படத்துடன் இப்படி விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கலாமே!

இம்மாதிரியான சூழலில் பிரபலங்கள் சிலர் சமூகப்பொறுப்புணர்வுடன் டெங்கு விழிப்புணர்வுப் புகைப்படங்களையோ, விடியோக்களையோ வெளியிட்டால் அது அரசுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பயன்படக்கூடிய விதத்தில் இருக்கு
குட்! டெங்குவுக்கு எதிராக பிரபலங்கள் பலரும் தங்கள் புகைப்படத்துடன் இப்படி விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கலாமே!

தெலங்கானா கவர்னராகப் பொறுப்பேற்றுக் கொண்டதுமே ஊடகங்களில் பேட்டியளித்த தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானாவில் தான் செய்யவிருக்கும் முதற்பணியாகக் குறிப்பிட்டது டெங்கு ஒழிப்பைத்தான். 

அந்தளவுக்கு அங்கு டெங்கு பாதிப்பு மிகத்தீவிரமாக இருக்கிறது. கவர்னராக மட்டுமல்ல அடிப்படையில் ஒரு மருத்துவராகவும் தமிழிசையின் இந்த முன்னெடுப்பை வரவேற்கலாம்.

டெங்கு காய்ச்சலின் மூலகாரணமே நமது சுற்றுப்புறங்களில் தேங்கும் குட்டைகள் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்கள் வாயிலாகப் பெருகும் கொசுக்கள் தான். இந்த டெங்கு கொசுக்களை ஒழிக்க வேண்டுமென்றால் நாம் வாழும் சுற்றுப்புறங்களையும், புழங்கும் இடங்களையும் வெகு நாட்களுக்குத் தொடர்ந்தாற்போல் தண்ணீர் தேங்காது பார்த்துக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் உலர முடியாத இடங்களில் தேங்கிப் போகும் நீர்க்குட்டைகளில் வெகு வேகமாகப் பரவத் தொடங்கும் கொசுக்களில் சில இனங்களின் வாயிலாகத்தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. எனவே நமது சுற்றுப்புறங்களை உலர்வாகவும் கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணமும் பாதுகாத்தால் போதும் கூடுமான வரை இந்த நோயின் பிடியின் சிக்குவதைத் தவிர்த்து விட முடியும். 

ஜூன் 22, 2019 அன்று மக்களவையில் அளிக்கப்பட்ட ஒரு தகவலின் வாயிலாக தென்னிந்தியாவில் டெங்குவால் இதுவரையிலும் 6,210 பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதும், 6 பேர் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்கள்
டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்கள்

அதுமட்டுமல்ல, டெங்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கும் 5 இந்திய மாநிலங்களில் மிக மோசமான பாதிப்புக்குள்ளானவை என அடையாளம் காணப்பட்டிருப்பவை கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கேரளா அடங்கும். இவற்றில் தமிழ்நாட்டில் 1303 பேரும், தமிழ்நாட்டில் 988 பேரும், தெலங்கானாவில் 767 பேரும், கேரளாவில் 469 பேரும் டெங்குவால் மோசமான தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறார்கள் எனப் அம்மாநிலப் புள்ளிவிவரக் கணக்குகள் கூறுகின்றன. இந்த நான்கு மாநிலங்களில் டெஙு உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது கேரளாவில் மட்டுமே. அங்கு 4 பேர் டெங்குவால் உயிரிழந்திருக்கிறார்கள். என மக்களவை கேள்வி நேரத்தின் போது மாநில சுகாதார அமைச்சர் அஸ்வினி செளபே குறிப்பிட்டார்.

இந்தப் பட்டியலில் தற்போது மகாராஷ்டிரமும் இணைந்திருக்கிறது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி வரையிலான ஆய்வு அடிப்படையில் அங்கு இதுவரை 767 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதோடு இரண்டு பேர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

மத்திய அரசும், மாநில அரசுகளும் பொதுமக்களிடையே டெங்கு குறித்து எத்தனை எச்சரிக்கைகள் விடுத்தாலும் அதெல்லாம் மக்களைச் சென்றடைந்து மக்கள் டெங்குவுக்கு எதிரான விழிப்புணர்வை அடைந்து விட்டார்களா? என்றால் அது இன்னும் ஐயத்திற்குரியதே.

இம்மாதிரியான சூழலில் பிரபலங்கள் சிலர் சமூகப்பொறுப்புணர்வுடன் டெங்கு விழிப்புணர்வுப் புகைப்படங்களையோ, விடியோக்களையோ வெளியிட்டால் அது அரசுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பயன்படக்கூடிய விதத்தில் இருக்கும்.

முகநூலைப் பொருத்தமட்டில் நடிகர் பிரபாஸ் தன் வீட்டுத் தோட்டத்தைப் புகைப்படமெடுத்து, இதே போல உங்களது சுற்றுப் புறத்தையும் உலர்வாகவும், தூய்மையாகவும் டெங்குவுக்கு எதிராகப் பொறுப்புடன் பராமரியுங்கள் என்று பதிவிட்டிருந்தார். உரிய நேரத்தில் இடப்பட்ட சமூக விழிப்புணர்வுப் பதிவென இதைப் பாராட்டலாம் தானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com