"பரியேறும் பெருமாள்' திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது

"பரியேறும் பெருமாள்' திரைப்படத்துக்கு புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது.
"பரியேறும் பெருமாள்' திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது

"பரியேறும் பெருமாள்' திரைப்படத்துக்கு புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது.
அந்த மாநில அரசின் செய்தி விளம்பரத் துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம், அலையன்ஸ் பிரான்சிஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய இந்திய திரைப்பட விழா புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. 
தொடக்க விழாவில், சிறந்த பிராந்திய மொழித் திரைப்படமாக "பரியேறும் பெருமாள்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செய்தி - விளம்பரத் துறை இயக்குநர் வினயராஜ் வரவேற்றார். சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி விழாவைத் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, "பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜிடம், சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கான சான்றிதழ், ரொக்கப் பரிசு ரூ. ஒரு லட்சம் ஆகியவற்றை அமைச்சர் கந்தசாமி வழங்கினார். விழாவில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., நவதர்ஷன் திரைப்பட க் கழகச் செயலர் பழனி, அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் சதீஷ் நல்லாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சியில் வங்க மொழித் திரைப்படம் "நகர்கீர்த்தன்' சனிக்கிழமை திரையிடப்பட்டது. மலையாள மொழித் திரைப்படம் "சூடானி ப்ரம் நைஜீரியா' ஞாயிற்றுக்கிழமை (செப். 15) திரையிரப்படவுள்ளது. தெலுங்கு மொழித் திரைப்படம் "மகாநதி' திங்கள்கிழமையும் (செப். 16), ஹிந்தி மொழித் திரைப்படம் "ராக்ஜி' செவ்வாய்க்கிழமையும் (செப். 17) திரையிடப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com