செய்திகள்

மீண்டும் வருகிறார் டெர்மினேட்டர்!

13th Sep 2019 02:42 PM | எழில்

ADVERTISEMENT

 

1991-ல் வெளியான டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே படத்தை சினிமா ரசிகர்களால் யாராலும் மறக்கமுடியாது. இயக்கம், கதை, தயாரிப்பு என பெரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அர்னால்ட் ஸ்வாஸ்நேகருடன் இணைந்து ஜேம்ஸ் கேம்ரூன் சாதித்த ஒரு படம். அர்னால்ட் ஸ்வாஸ்நேகருக்கு மிகப்பெரிய ரசிகர் படையை உருவாக்கிய படம் அது. இதன்பிறகு 2003-ல், Terminator 3: Rise of the Machines, 2009-ல் Terminator Salvation, 2015-ல், Terminator Genisys என டெர்மினேட்டர் படத்தின் ஐந்து பாகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. 1984-ல் தி டெர்மினேட்டர் படத்துடன் ஆரம்பமான வரிசை இது. 

தற்போது, டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் (Terminator: Dark Fate) என்கிற படம் ஜேம்ஸ் கேம்ரூன் - அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் கூட்டணியில் உருவாகியுள்ளது. டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே படத்துக்குப் பிறகு இந்தக் கூட்டணி இப்போதுதான் டெர்மினேட்டர் பாகத்துக்காக இணைந்துள்ளது. ஜேம்ஸ் கேம்ரூன் தயாரிப்பில், டிம் மில்லர் இயக்கத்தில் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர், லிண்டா ஹேமில்டன் நடிப்பில் வரும் நவம்பர் 1 அன்று இந்தியாவில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் வெளியிடப்படுகிறது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT