வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

கண்ணான கண்ணே மாதிரி ஒரு பாடலைக் கேட்டதுக்கு இந்தப் பாடல் கிடைத்தது: இயக்குநர் பாண்டிராஜ்

By எழில்| DIN | Published: 11th September 2019 02:40 PM

 

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வரும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் இதற்கு முன்பு, துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, சமுத்திரக்கனி, நடராஜன், ஆர்கே சுரேஷ் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி ரூபன். இசை - இமான். படப்பிடிப்பு மே 8 அன்று தொடங்கியது. செப்டம்பர் 27 அன்று வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள உன் கூடவே பொறக்கணும் பாடலின் லிரிக் விடியோ இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் ட்வீட் செய்ததாவது: கண்ணான கண்ணே மாதிரி ஒரு பாடல் வேணும் சார்னு கேட்டதுக்கு... ட்யூன் போடும்போதே அழுதுகிட்டே கேட்ட பாடல். எனக்குப் பிடித்தமான பாடல். நன்றி இமான் என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Namma Veettu Pillai Unkoodave Porakkanum Lyric Video Sivakarthikeyan D.Imman Pandiraj

More from the section

காப்பான் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
குட்! டெங்குவுக்கு எதிராக பிரபலங்கள் பலரும் தங்கள் புகைப்படத்துடன் இப்படி விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கலாமே!
வார்: ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட 2.30 நிமிட சண்டைக் காட்சி!
ஜப்பானில் வெளியாகவுள்ள சூப்பர் ஹிட் ஹிந்திப் படம்!
‘சின்னச் சின்ன ஆசை' பாடல் புகழ் மின்மினி குறித்தொரு தகவல்!