வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

ஆந்திரா, தெலங்கானாவில் பெரிய அளவில் வெளியாகவுள்ள பிகில்!

By எழில்| DIN | Published: 11th September 2019 05:45 PM

 

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிகில் படத்தின் தெலுங்குப் பதிப்புக்கான உரிமையை ஈஸ்ட் கோஸ்ட் நிறுவனம் பெற்றுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா என இரு மாநிலங்களிலும் பிகில் படம் 400 திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெளிமாநிலங்களில் கேரளாவுக்கு அடுத்ததாக இவ்விரு மாநிலங்களிலும் பிகில் படத்துக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Bigil Telugu rights 400 screens AP Telangana

More from the section

காப்பான் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
குட்! டெங்குவுக்கு எதிராக பிரபலங்கள் பலரும் தங்கள் புகைப்படத்துடன் இப்படி விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கலாமே!
வார்: ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட 2.30 நிமிட சண்டைக் காட்சி!
ஜப்பானில் வெளியாகவுள்ள சூப்பர் ஹிட் ஹிந்திப் படம்!
‘சின்னச் சின்ன ஆசை' பாடல் புகழ் மின்மினி குறித்தொரு தகவல்!