செய்திகள்

சீரியல் படப்பிடிப்புக்காகச் சென்ற இடத்தில் விபத்து... போட்டோகிராபர் மரணம், நடிகர் பலத்த காயம்!

4th Sep 2019 12:05 PM | சரோஜினி

ADVERTISEMENT

 

திண்டுக்கல் அருகே தொலைக்காட்சி மெகா சீரியல் படப்பிடிப்புக்காகச் சென்ற இடத்தில் நேற்று முன் தினம்... சாலை விபத்தில் சிக்கி ஸ்டில்ஸ் சிவா எனும் ஃபோட்டோகிராபர் மரணமடைந்தார். அவருடன் பயணித்த நடிகர் ஒருவர் பலத்த காயங்களுடன் உத்தமபாளையம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகரின் பெயர் தவசி, இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்திருக்கிறார். மேலும் கிராமாந்திரக் கதைகளை பின்புலமாகக் கொண்ட பல படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

விபத்தில் கடுமையான காயங்களுடன் மரணமடைந்த ஸ்டில்ஸ் சிவா சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலமாக சினிமா வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : actor injured seial shooting accident photographer died actor thavasi நடிகர் தவசி காயம் ஃபோட்டோகிராபர் மரணம் சீரியல் படப்பிடிப்பு ஸ்டில்ஸ் சிவா மரணம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT